Wednesday, May 1, 2019

நிம்மதிய கண்டுபுடிச்சிட்டான்யா

ஏதோ ஒரு ஊருல, யாரோ ஒருத்தன், எப்பவோ ஒரு நேரத்துல நிம்மதியத்  தேடி போய்கிட்டிருந்தான்.

அப்போ அவனுக்கு ஒரு பாட்டு ஞாபகம் வந்ததால, "எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கொரு இடம் வேண்டும், அங்கே எனக்கொரு இடம் வேண்டும்" அப்படின்னு சத்தமா பாடினான்.

அந்த வழியா போன நிழல் அவன பாத்து, ஏய் நீ ஏன்யா நிம்மதிய தேடுற? அவன் ஒரு வீணாப்போனவன். இதோ அந்த பக்கமா இருக்குற வெந்த மரத்துகிட்ட இருக்கிற வீட்டுலதான் நிம்மதி இருக்கான்னு சொல்லிட்டு மண்டைய பொழக்குற மத்தியான வெயிலில மாயமா மறைஞ்சுட்டானாம்.

சந்து பொந்த தாண்டி, அந்த வெந்த மரத்துக்கு பக்கத்துல உள்ள வீட்டுக்கு போனானாம் அந்த ஒருத்தன். அட இது என்னது நம்மள மாதிரியே ஒருத்தன் வீட்டுக்குள்ள இருக்கான்னு பாக்குறப்போ அவனுக்கு உடம்பெல்லாம் சுள்ளுன்னு எரிய ஆரம்பிச்சுது. அப்பாடி, இந்த சூட்டுல தான் இந்த நிழல் மரம் வெந்துருக்கும் போல அப்படின்னு நகந்து நிக்குறப்போ மாலை நேரம் வந்துருச்சாம்.

மறுபடியும் அது யாருன்னு அந்த வீட்டுக்குள்ள பாக்குறப்போதான் அது ஒரு குழிவான கண்ணாடின்னு தெரிஞ்சுது. அப்போ அதுல இருக்கிறது நாமதான் அப்படின்னு உத்து பாத்தா அவன் பட்டினி வயிறு தொப்பையா தெரிஞ்சுதாம்; குழி விழுந்த கன்னம் உப்பி போயிருந்திச்சாம். கையும் கரளகட்ட மாதிரி உருளையா இருந்துச்சி. அத பாத்து கலகலன்னு சிரிச்சானாம்.

அடடா நம்மள நாமளே பாக்குற விதத்தில் தான் நிம்மதி இருக்கா? அத விட்டுட்டு அடுத்தவன் கண்ணுக்கு எப்படி இருக்குறோம்னு நெனச்சுகிட்டே இருந்தனால எனக்கு நிழல் கொடுக்கிற உறவுகளையும் வெந்துபோக விட்டுட்டேனே அப்படின்னு நெனைக்கிறப்போ நிலா சிரிச்சிச்சாம், நட்சத்திரம் கண் அடிச்சிச்சாம்.

This is an impromptu story that my kids appreciated much as I shared it with them during their bed time on 1st May 2019